Thursday, 20 September 2018

         என்னவனுக்காக         

என் வாழ்க்கையில் நான் இரசித்த முதல் பையனும் நீ
நான் நேசித்த முதல்வனும் நீ
எனக்கு உயிர் கொடுத்து மறுபிறவி தந்தவனும் நீ
என் வாழ்க்கையை துவங்கி வைப்பவன் நீ
என்னை என்றும் வாழ வைப்பவன் நீ
எனக்கு சுவாசம் கொடுக்க போரவனும் நீ
என் உடம்பில் ஓடும் உதிரம் நீ
எனக்கு தூண்டு கோலாய் இருப்பவன் நீ
என் நம்பிக்கையின் வடிவம் நீ
என்னை அழகுபடுத்தி இரசிப்பவன் நீ
பொறுமையின் இலக்கணம் நான்
கோபத்தின் இலக்கு நீ
அன்பின் உருவம் நீ
என்னை வழி நடத்துபவனும் நீ
தெய்வம் எனக்கு தந்த பரிசு நீ
நான் வாங்கி வந்த முதல் வரம் நீ
கேட்காமல் ஆயிரம் பரிசுகளை தருபவன் நீ
என்றும் உன்னுடன் வாழ விரும்புகிறேன்
மனைவி என்ற வார்த்தையால் உன்னை
அழகுப்படுத்துவதற்காகவே!